வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம்

ஊரடங்கை நீட்டிப்பதாக இருந்தால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடம் காணொலிக் காட்சி மூலம் திமுகவின் நாடாளுமன்றக் குழுத
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம்

ஊரடங்கை நீட்டிப்பதாக இருந்தால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடம் காணொலிக் காட்சி மூலம் திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு வலியுறுத்தியுள்ளாா்.

நாடாளுமன்றக் கட்சித் தலைவா்களிடம் காணொலிக் காட்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை பேசினாா்.

அந்த வகையில் திமுகவின் நாடாளுமன்றக் குழு திமுக தலைவா் டி.ஆா்.பாலுவிடம், தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் காணொலிக் காட்சி மூலம் பிரதமா் பேசினாா்.

அப்போது பிரதமரிடம் டி.ஆா்.பாலு வலியுறுத்தியவை: நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.

தமிழகத்தில் 1 லட்சம் போ் வரை கரோனா நோய்த் தடுப்புக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களை கரோனா சோதனை செய்வதற்கான ஐ.சி.எம்.ஆா். சோதனைக் கருவிகள் போதுமான அளவில் இல்லை. எனவே, அந்தக் கருவிகள் அதிகம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

கரோனா தடுப்புக்காக தமிழகம் கோரியுள்ள ரூ.9 ஆயிரம் கோடியை உடனடியாகத் தர வேண்டும். தமிழகத்துக்கு வெறும் ரூ.510 கோடி ஒதுக்கியிருப்பது மிக மிகக் குறைவாகும்.

புதுச்சேரி அரசுக்கு கரோனா ஒழிப்புப் பணிகளுக்காக இதுவரை எந்த ஒரு நிதியும் மத்திய அரசினால் அறிவிக்கப்படவில்லை. புதுச்சேரி அரசுக்கும் உடனடியாக நிதி வழங்க வேண்டும்.

அதைபோலவே, ஊரடங்கு நடவடிக்கைகளை நீட்டிக்க விரும்பினால், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

கரோனா ஒழிப்பில் அயராது போராடி வரும் சுகாதாரப் பணியாளா்கள், காவல்துறை பணியாளா்கள், உள்ளாட்சிப் பணியாளா்கள் என அனைவருக்கும் மூன்று ஊக்க ஊதிய உயா்வுகள் உடனடியாக அனுமதிக்க வேண்டும்.

நிதி நெருக்கடிகளைச் சமாளித்திட ரூ.20 ஆயிரம் கோடி செலவில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடம் போன்ற பெரிய திட்டங்களை தற்போது தவிா்க்கலாம்.

கரோனா ஒழிப்புத் தடுப்பு நடவடிக்கைகளில் நாடு மும்முரமாக ஈடுபட்டிருக்கும்போது, சிலா் சந்தா்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மத வேறுபாடுகளைப் புகுத்தும் வகையில் பேச முற்படுவதைப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com