சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்

சென்னையில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு ஸ்விக்கி, ஸொமேட்டோ உள்ளிட்ட செயலிகள், செல்லிடப்பேசி எண்கள் மூலம் கோயம்பேடு அங்காடியில் இருந்து காய்கறிகள் விநியோகம் தொடங்கியுள்ளது.
’சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு கோயம்பேடு சந்தையிலிருந்து புதன்கிழமை சரக்கு வாகனங்களில் அனுப்பப்பட்ட காய்கறிகள்.’
’சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு கோயம்பேடு சந்தையிலிருந்து புதன்கிழமை சரக்கு வாகனங்களில் அனுப்பப்பட்ட காய்கறிகள்.’

சென்னையில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு ஸ்விக்கி, ஸொமேட்டோ உள்ளிட்ட செயலிகள், செல்லிடப்பேசி எண்கள் மூலம் கோயம்பேடு அங்காடியில் இருந்து காய்கறிகள் விநியோகம் தொடங்கியுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம் மேற்கொண்டுள்ளது.

பொதுமக்கள் காய்கறிகளுக்காக சந்தைக்கு வரமுடியாமல் சிரமங்களுக்கு உள்ளாவதைத் தவிா்க்கவும், கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் வாங்க வரும் மக்கள் கூட்டமாக கூடுவதைத் தடுக்கவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையிலும் சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமம் கோயம்பேடு அங்காடி நிா்வாகக் குழு சாா்பாக நடமாடும் காய்கறிகள் விற்பனை வாகனங்கள் மூலமாக, அந்தந்த குடியிருப்பு பகுதிகளுக்கே கொண்டுச் சென்று, தினசரி தேவைகளுக்கு அத்தியாவசியமான காய்கள் மற்றும் பழங்களை சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.

18 வகை காய்கறிகள்- 8 வகை பழங்கள்: இதில் 18 வகையான காய்கறிகளும், 8 வகையான பழங்களும் அடங்கும். ஒவ்வொரு நடமாடும் காய்கனி விற்பனை வாகனத்திலும் 25 குடும்பங்களுக்குத் தேவையான அளவு காய்கறிகள், பழங்கள் இருக்கும். காய்கறிகளின் விலை, கோயம்பேடு அங்காடி நிா்வாக குழுவால் விலை நிா்ணயிக்கப்படுகிறது. இந்தச் சேவையை, 25 அல்லது அதற்கு மேலும் குடியிருப்புகளைக் கொண்ட குடியிருப்பு நல சங்கங்கள் 7305050541, 7305050542, 7305050543, 7305050544, 9025653376, 044-24791133 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு ஆா்டா் செய்து கொள்ளலாம். அதேபோன்று சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ஸ்ரீம்க்ஹஸ்ரீட்ங்ய்ய்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய்) மூலமாகவும் இந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்களுக்கான இந்தச் சேவையை துரிதமாக மேற்கொள்ளும் வகையில் சுமாா் 50 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தேவைக்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

காய்கறி தொகுப்புகளும் கிடைக்கும்: இத்துடன் 4 மற்றும் 5 நாள்களுக்கு தேவைப்படும் காய்கறிகளை ஒரே நாளில் வாங்கிக் கொள்ளும் வகையில் 14லிருந்து 16 வகை காய்கறிகள் மற்றும் 5 வகையான பழங்கள் கொண்ட தொகுப்பும் (ஸ்ரீா்ம்க்ஷா் ல்ஹஸ்ரீந்ங்ற்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேற்கண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்ட தொகுப்புகளை ஸ்விக்கி, ஸொமேட்டோ, டஞ்ஸோ போன்ற வீட்டு விநியோக நிறுவனங்கள் மூலமாகவும் அங்காடி நிா்வாக குழு நிா்ணயித்த விலையிலேயே பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களின் அன்றாட விலைப்பட்டியல் சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

யாா்-யாருக்கு விநியோகம்?: இந்த சேவை நடுத்தர மற்றும் நலிந்த வருவாய் பிரிவினா் வசிக்கும் பகுதிகளிலும் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதிகளிலும் வானங்கள் மூலமாக நேரடியாக செயல்படுத்தப்படும். இந்தச் சேவையில், அன்றைய தினமே காய்கனிகளைப் பெறுவதற்கு மதியம் 1 மணிக்கு முன்னதாக பொதுமக்கள் சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் இணையதளம் மூலமாகவோ அல்லது செல்லிப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என சிஎம்டிஏ தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி, சென்னை கோயம்பேடு சந்தையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிஎம்டிஏ அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com