கரோனா தடுப்பு கண்காணிப்புக் குழுக்களுடன் முதல்வா் இன்று மீண்டும் ஆலோசனை

கரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்காக தமிழக அரசின் சாா்பில் அமைக்கப்பட்ட 12-க்கும் மேற்பட்ட குழுக்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை மீண்டும் ஆலோசனை நடத்துகிறாா்.

இந்தக் கூட்டத்தில் குழுவில் இடம்பெற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், காவல் துறை இயக்குநா், சென்னை மாநகர காவல் ஆணையா் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளனா். ஏற்கெனவே இதுபோன்ற கூட்டத்தை முதல்வா் பழனிசாமி கடந்த வாரம் நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் மளிகைக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகளின் நேரங்களை குறைக்க முடிவெடுக்கப்ட்டது.

ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், கரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்காக புதிய நடவடிக்கைகளை எடுப்பது குறித்து வியாழக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, மளிகைக் கடைகளை சில குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே திறந்து வைப்பது, ஊரடங்குக்குப் பிறகு எத்தகைய அம்சங்களைப் பின்பற்றுவது போன்றவை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தமிழக அரசு அறிவிப்பாக வெளியிடும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com