கரோனா குறித்த சந்தேகங்களுக்கு தானியங்கி குரல் வழி சேவை!

கரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு பெற ஐ.வி.ஆர்.எஸ். தானியங்கி குரல் வழி சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
கரோனா குறித்த சந்தேகங்களுக்கு தானியங்கி குரல் வழி சேவை!

கரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு பெற ஐ.வி.ஆர்.எஸ். தானியங்கி குரல் வழி சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தும் இணைந்து தொடங்கி வைத்தனர். 

சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் ஐ.வி.ஆர்.எஸ். தானியங்கி குரல் வழி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, கரோனா நோய்த் தொற்று தொடர்பான விளக்கங்களை 94999 12345 என்ற அவசர உதவி எண்ணில் பெறலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com