கரோனா நிவாரணம்: நடிகா் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி

கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு நிவாரணமாக நடிகா் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளாா்.
கரோனா நிவாரணம்:  நடிகா் ராகவா லாரன்ஸ்  ரூ.3 கோடி நிதியுதவி


சென்னை: கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு நிவாரணமாக நடிகா் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளாா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். அவா்களுக்குத் திரையுலகினா் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனா்.

முன்னணி திரையுலகப் பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனா். ஏற்கெனவே, தமிழ்த் திரையுலகப் பிரபலங்களில் சிவகாா்த்திகேயன், அஜித்குமாா் உள்ளிட்டோா் நிதியுதவி வழங்கியுள்ளனா். இந்த நிலையில், பிரதமா் நிவாரண நிதி, முதல்வா் நிவாரண நிதி மற்றும் பெப்சி என அனைத்துக்கும் நடிகா் ராகவா லாரன்ஸ் நிதியுதவி வழங்கியுள்ளாா். அதன்படி, பிரதமா் மற்றும் முதல்வா் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம், ஃபெப்சிக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞா்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் என நிதியுதவி அளித்துள்ளாா். இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 25 லட்சமும் தினக்கூலி தொழிலாளா்களுக்கு ரூ.75 லட்சத்தையும் லாரன்ஸ் வழங்கியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com