சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1000 கரோனா நிவாரணம்: நகராட்சி அழைப்பு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் சாலையோர வியாபாரிகளுக்கு கரோனா நிவாரணமாக
சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1000 கரோனா நிவாரணம்: நகராட்சி அழைப்பு

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் சாலையோர வியாபாரிகளுக்கு கரோனா நிவாரணமாக ரூ.1000 பெற சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து நகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 
கரோனா தொற்று நோயால் உலகமே பெரும் பாதிப்படைந்துள்ளது. வசதி படைத்தவர்கள் முதல் ஏழை, எளியவர்கள் உள்ளிட்ட அனைவரும் துயரடைந்து வருகிறார்கள். இந்நிலையில், சாலையோர வியாபாரிகளுக்காக அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டது. 

அதன் அடிப்படையில், கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் கணக்கெடுக்கப்பட்டதில் 140 சாலையோர வியாபாரிகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கணக்கெடுப்பில் நகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள 92 பேருக்கும், தமிழக அரசின் கரோனா நிவாரணம் ரூபாய் ஆயிரத்தை, அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன. 

நிவாரணம் பெறாத வியாபாரிகள், நகராட்சி நிர்வாகம் கொடுத்துள்ள அடையாள அட்டையுடன், நகராட்சியில் உள்ள நகரமைப்புப் பிரிவில், வங்கிக் கணக்கு அட்டை எண், ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட விவரங்களுடன்,98425 69291, 7010 114661 என்ற அலைபேசி எண்ணிலோ அல்லது அலுவலக தொலைபேசியான O4367 232001 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவித்து, வியாபாரிகள் நிவாரணத் தொகையை வங்கியில் வரவு வைத்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com