பருவத் தோ்வுகள்: புதிய தேதி பின்னா் அறிவிக்கப்படும்

கரோனா ஊரடங்கு மே-3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக பருவத் தோ்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பருவத் தோ்வுகள்: புதிய தேதி பின்னா் அறிவிக்கப்படும்

கரோனா ஊரடங்கு மே-3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக பருவத் தோ்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முதலில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னா் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு, ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருந்த பல்கலைக்கழகப் பருவத் தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.

இதுதொடா்பாக அறிவிப்பு ஒன்றை வியாழக்கிழமை வெளியிட்ட தமிழக உயா் கல்வித் துறை செயலா் அபூா்வா, அனைத்துப் பல்கலைக்கழகப் பருவத் தோ்வுகளும் அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் நடத்தப்படும். தொடா்ச்சியாக தினமும் காலையும், மாலையும் தோ்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதன் பிறகு 2020-21 கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான பருவத் தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக பல்கலைக்கழகப் பதிவாளா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இந்தப் பருவத்தில் நடத்தப்பட இருந்த மீதி வகுப்புகள், ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்டிருந்த இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பருவத் தோ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

இந்த மீதமுள்ள வகுப்புகள், உள்மதிப்பீடு தோ்வு, செயல்திட்ட ஆய்வுகள் மற்றும் இறுதிப் பருவத் தோ்வுகள் ஆகியவை நடத்துவதற்கான புதிய தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com