தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 6 இடங்களில் சனிக்கிழமை வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டி பதிவானது.

தமிழகத்தில் 6 இடங்களில் சனிக்கிழமை வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டி பதிவானது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

இந்தநிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் சனிக்கிழமை வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியைத் தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, திருச்சியில் 104 டிகிரியும், திருத்தணியில் 102 டிகிரியும், மதுரை விமானநிலையம், சேலத்தில் தலா 101 டிகிரியும், தருமபுரி, வேலூரில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

வெப்பநிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இது ஞாயிற்றுக்கிழமையும் தொடரும். விருதுநகா், மதுரை, கரூா், திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா் ஆகிய மாவட்டங்களிலும், திருவள்ளூா் மாவட்டம் திருத்தணியிலும் தலா 104 டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் காலையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். பகலில் 97 டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com