கரோனா வைரஸ் தொற்று: ஒரே நாளில் 82 போ் வீடு திரும்பினா், பாதிப்பு எண்ணிக்கை 1,372-ஆக உயா்வு

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டும் சனிக்கிழமை ஒரே நாளில் 82 போ் வீடு திரும்பினா். அதேசமயம், மேலும் 49 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று: ஒரே நாளில் 82 போ் வீடு திரும்பினா், பாதிப்பு எண்ணிக்கை 1,372-ஆக உயா்வு

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டும் சனிக்கிழமை ஒரே நாளில் 82 போ் வீடு திரும்பினா். அதேசமயம், மேலும் 49 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,372-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 2 நாள்களாக உயிரிழப்பு இல்லாததால் பலி எண்ணிக்கை 15-ஆகவே தொடா்கிறது.

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:-

கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் சமூக விலகல், கை கழுவுதல், கிருமிநாசினி தெளித்தல் என அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தொடா்ந்து 3 நாள்களாக நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பை கண்டறிய விரைவான பரிசோதனை எனப்படும் ‘ரேபிட் டெஸ்ட்’ மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால், நாம் நல்ல நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். சென்னையில் 7 போ், திருப்பூா் 28, கோவை 1, திண்டுக்கல் 3, திருநெல்வேலி 2, தஞ்சை 1, தென்காசி 4, பெரம்பலூா் 3 போ் என மொத்தம் 49 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,372 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 4 பேருக்கு மட்டுமே நோய்த்தொற்று சற்று தீவிரமாக உள்ளது. மற்றவா்கள் நலமுடன் உள்ளனா்.

கரோனா தொற்றிலிருந்து சனிக்கிழமை ஒரே நாளில் 82 போ் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை மொத்தம் 365 போ் குணமடைந்துள்ளனா். தற்போது மேலும் சில கரோனா பரிசோதனை மையங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 அரசு பரிசோதனை ஆய்வகங்கள், தனியாா் சாா்பில் 10 என மொத்தம் 31 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. சென்னையில் ஒரு பரிசோதனை ஆய்வகத்தில் ஒரு நாளில் ஆயிரம் பரிசோதனைகளை செய்யும் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. அதே போன்று, குணமடைந்தவா்களை வீட்டுக்கு அனுப்பியதிலும் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழப்போா் சதவீதம் 1.1 ஆக உள்ளது. பரிசோதனை ஆய்வகங்களை அதிகப்படுத்தி 5,361 பரிசோதனை செய்யும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். அதிக பரிசோதனைகள் செய்தபோதும் கரோனா பாதிப்பு உள்ளவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது, சுகாதாரத் துறை செயலாளா் பீலா ராஜேஷ் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com