தேமுதிகவினர் முகக்கவசம் அணிந்து வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: விஜயகாந்த்

தேமுதிகவினர் அனைவரும் முகக்கவசம் அணிந்து வலைத்தளங்களில் பதிவிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
விஜயகாந்த்
விஜயகாந்த்

தேமுதிகவினர் அனைவரும் முகக்கவசம் அணிந்து வலைத்தளங்களில் பதிவிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் கரோனா வைரஸுக்கு எதிராக ஊரடங்கு அமலுக்கு வந்து ஒரு மாதம் முடிந்து மே 3ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த தமிழக மக்களும், தேமுதி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவருமே, அவரவர்கள் முகத்தில் முகக்கவசம் அணிந்து மொபைல் போனில் செல்ஃபி படம் எடுத்து டிபியாக பதிவிட்டும், அதை சமூக வலைதளங்களில் முகநூல், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்றவற்றில் பதிவிட்டு முகக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் விழிப்புணர்வு பிரசாரத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்படுத்த வேண்டும் என தமிழக மக்களையும் தேமுதிக தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை மே 3ஆம் தேதி வரை அவரவர்கள் மொபைலில் டிபியாக வைத்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com