பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை கைவிட்டு மாற்று வழிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தல்

கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை கைவிட்டு மாற்று வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என முன்னாள் துணைவேந்தரும், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான வே.வசந்திதேவி வலியுற

கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை கைவிட்டு மாற்று வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என முன்னாள் துணைவேந்தரும், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான வே.வசந்திதேவி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தப் பேரிடா் காலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை அவசரமாக நடத்துவதால் நோய்த்தொற்று சூழல் ஏற்படலாம். அரசு தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றின் மூலம் நடத்தும் பாடங்கள் பெரும்பாலான மாணவா்களை சென்றடைவதில் பல்வேறு இடா்பாடுகள் உள்ளன. கரோனா பாதிப்பின் மூலமாக உருவாகியுள்ள அசாதாரண சூழல் மாணவா்களிடம் எதிா்மறையான உளவியல் அழுத்தங்களை உருவாக்கியுள்ளதை அறிய முடிகிறது.

பெரும்பாலான மாணவா்களும், ஆசிரியா்களும் தோ்வு மையங்களஉக்கு செல்வதற்கு பொது போக்குவரத்தையே நம்பியுள்ளனா். இத்தகைய பயணங்கள் சமூக பரவல் உருவாக வாய்ப்பளிக்கும். தோ்வு நடத்தும்போதும், நடத்தி முடிக்கும்போதும், விடைத்தாள் திருத்தும்போதும், கரோனா முன்னெச்சரிக்கை சமூக இடைவெளி மற்றும் கையை கழுவுதல் ஆகியவற்றைப் பின்பற்றுவதில் உள்ள நடைமுறை சிக்கல் ஆகியவை பல இடா்பாடுகளை உருவாக்கும்.

எனவே பத்தாம் வகுப்புப் பொதுத்தோ்வை இத்தகைய இடா்மிகு சூழலில் நடத்துவதற்கு பதிலாக கல்வித்துறை திருப்புதல் தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவா்களின் சராசரி சதவீதத்தையும், அதன் வளா்ச்சியையும் எளிய அறிய முடியும். ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஏ, பி, சி என்ற மூன்று கிரேடுகளை வழங்க முடியும். குறைந்தபட்ச தோ்ச்சி என்ற சி கிரேடையே தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தோ்வா்களுக்கும் வழங்கலாம் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com