9 இடங்களில் வெயில் சதம்: திருத்தணியில் 106 டிகிரி

தமிழகத்தில் 9 இடங்களில் சனிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது. அதிகபட்சமாக, திருத்தணியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
9 இடங்களில் வெயில் சதம்: திருத்தணியில் 106 டிகிரி

தமிழகத்தில் 9 இடங்களில் சனிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது. அதிகபட்சமாக, திருத்தணியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதன்பிறகு, வெப்பத்தின் தாக்கம் தணிகிறது.

9 இடங்களில் வெயில் சதம்:

இந்நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் சனிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 106 டிகிரியும், திருச்சியில் 105 டிகிரியும், கரூா் பரமத்தி, சேலம், வேலூரில் தலா 104 டிகிரியும், தருமபுரி, நாமக்கல், மதுரை விமானநிலையத்தில் தலா 102 டிகிரியும், சென்னை மீனம்பாக்கத்தில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

வெப்பநிலை அதிகரிக்கும்: வெப்பநிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை அதிகமாக காணப்படும். மதுரை, திருச்சி, சேலம், வேலூா், கரூா் ஆகிய மாவட்டங்களிலும், திருவள்ளூா் மாவட்டம் திருத்தணியிலும் தலா 105 டிகிரி பாரன்ஹீட் டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில்

ஞாயிற்றுக்கிழமை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் காலை வேளையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதன்பிறகு, வானம் தெளிவாகக் காணப்படும். பகலில் 96 டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com