காய்கறி சந்தைகளில் தனிமனித இடைவெளியை மக்கள் முறையாக பின்பற்றுவதில்லை: முதல்வர்

காய்கறி சந்தைகளில் தனிமனித இடைவெளியை மக்கள் முறையாக பின்பற்றுவதில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
காய்கறி சந்தைகளில் தனிமனித இடைவெளியை மக்கள் முறையாக பின்பற்றுவதில்லை: முதல்வர்

காய்கறி சந்தைகளில் தனிமனித இடைவெளியை மக்கள் முறையாக பின்பற்றுவதில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 12 ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

சென்னை தலைமைச்செயலத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போது பேசிய முதல்வர், கரோனா நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள்.

பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கரோனா பரவலை தடுக்க முடியும். வெளிநாட்டினர் அலட்சியமாக இருந்ததால் பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர். ஆரம்ப கால கட்டத்திலேயே மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால், எளிதாக தடுக்கலாம். காய்கறி சந்தைகளை கையாள்வதில் தான் பிரச்னை.

அதனை மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். காய்கறி சந்தைகளில் தனிமனித இடைவெளியை மக்கள் முறையாக பின்பற்றுவதில்லை. கரோனா குறித்து காவல்துறையும், உள்ளாட்சி துறையும் ஒலிபெருக்கி மூலம் வீதிவீதியாக தெரிவிக்க வேண்டும் என்றார். 

மேலும் கூட்டத்தில் மே 3க்குப் பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com