காவிரி நதிநீா் மேலாண்மை ஆணைய விவகாரம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எல்.முருகனின் 5 கேள்விகள்

காவிரி நதிநீா் மேலாண்மை ஆணைய விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜகவின் தமிழக தலைவர் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி நதிநீா் மேலாண்மை ஆணைய விவகாரம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எல்.முருகனின் 5 கேள்விகள்

காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மத்திய அரசு இந்த முடிவை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவா்கள் எச்சரித்துள்ளனா். இந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜகவின் தமிழக தலைவர் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில்,
1. 50 ஆண்டுகால காவேரி நதிநீர் ஒப்பந்தத்தை முதன்முதலில் புதுப்பிக்க தவறியது யார்?

2. 1974ஆம் ஆண்டு மாநில முதல்வரின் பேச்சுவார்த்தையில், மத்திய நீர்ப்பாசன அமைச்சரை கேட்காமலே தமிழ்நாட்டில் 100 டிஎம்சி தண்ணீர் உரிமையை விட்டுக் கொடுத்தது யார்?

3. 2004-2013 வரை மத்திய அரசில் அங்கம் வகித்து கூட காவேரி பிரச்னையை தீர்க்காதது யார்?

4. கர்நாடகத்தில் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் ஆட்சியிலிருந்து போதும்கூட தமிழகத்துக்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட பெற்றுத் தராது யார்?

5. கூட்டாட்சி தத்துவம் மாநில உரிமை என பேசும் ஸ்டாலின், கூட்டாட்சி தத்துவத்துக்கு உலை வைக்கும் அரசியல் சட்ட 356 பிரிவை அதிகம் பிரயோகித்த காங்கிரஸ் கட்சி, குறிப்பாக திமுக மீதே 2 முறை பிரயோகித்தும், அவர்களோடு தொடர்ந்து சந்தர்ப்பவாத கூட்டு வைத்திருப்பது, முரண்பாடுகளின் மொத்த உருவம் தானே திமுக? 

மேலும் இதுதொடர்பான மற்றொரு பதிவில், "காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை மத்திய ஜலசக்தி அமைச்சகத்தில் இணைத்தது, அதற்கு மேலும் வலுவூட்ட, பலம் சேர்க்க, விரைவாக முடிவெடுக்க என்கிற அடிப்படை ஞானம் கூட ஸ்டாலினிடத்தில் இல்லாதது ஏன்?

மத்திய மாநில அரசுகள் சிறப்பான கரோனா நிவாரண பணிகளால் மக்கள் ஆதரவை பெற்று வருவதால் ஏற்பட்ட தோல்வி புலம்பல்! இவ்வாறு எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com