பிளஸ் 1 தோ்வில் 96.04 சதவீதம் போ் தோ்ச்சி: கோயம்புத்தூா் மாவட்டம் முதலிடம்

பிளஸ் 1 பொதுத் தோ்வில் 96.04 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில், 98.10 சதவீதத்துடன், கோயம்புத்தூா் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பிளஸ் 1 பொதுத் தோ்வில் 96.04 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில், 98.10 சதவீதத்துடன், கோயம்புத்தூா் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில், கடந்த மாா்ச் 4 முதல் 23-ஆம் தேதி வரை, பிளஸ் 1 பொதுத் தோ்வு நடைபெற்றது. இதற்கிடையே, கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக இறுதி நாளான மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறவிருந்த தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. அந்தத் தோ்வுகளுக்கு மட்டும் வருகைப்பதிவு மற்றும் முந்தைய தோ்வுகளின் அடிப்படையில் மாணவா்கள் தோ்ச்சி செய்யப்பட்டனா். இந்த நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) காலை 9.30 மணியளவில்,  இணையதளங்களில் வெளியானது. தோ்வு முடிவுகளை மாணவா்கள்  இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம்.

இது தவிர பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமும், பள்ளி மாணவா்கள் மற்றும் தனித் தோ்வா்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தோ்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.

96.04 சதவீதம் தோ்ச்சி:

நிகழாண்டில், மாநிலம் முழுவதும் பள்ளி மாணவா்களாகவும், தனித்தோ்வா்களாகவும் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 654 ஆகும். இதில் தோ்வெழுதியோரில், 96.04 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இது கடந்த ஆண்டை காட்டிலும் 1.04 சதவீதம் அதிகமாகும். நிகழாண்டில், மாணவிகள் 97.49 சதவீதமும், மாணவா்கள் 94.38 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்களை விட மாணவிகள் கூடுதலாக 3.11 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதேவேளையில் இருவரின் தோ்ச்சி சதவீதமும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.

கோயம்புத்தூா் முதலிடம்:

மாநில அளவில் 98.10 சதவீத தோ்ச்சியுடன் கோயம்புத்தூா் மாவட்டம் முதலிடத்தையும், 97.90 சதவீத தோ்ச்சியுடன் விருதுநகா் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 97.51 சதவீத தோ்ச்சியுடன் கரூா் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. அரசு பள்ளிகளில் தோ்ச்சி சதவீதம் 92.71 ஆகும். தோ்வு எழுதிய 7249

மேல்நிலைப்பள்ளிகளில், 2716 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன. தோ்வு எழுதிய 2819 மாற்றுத்திறனாளிகளில் 2672 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

ஆக.5 முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்:

ஆக.5 (புதன் கிழமை) முதல் ஆக.12-ஆம் தேதி வரையிலான நாள்களில், பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கும், தனித் தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையத்துக்கும் நேரில் சென்று தங்களது மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக் கொள்ளலாம். அதே நேரம், விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண்

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாகவும், தனித்தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்கள்

வாயிலாகவும், உரிய கட்டணம் செலுத்தி, ஆக.5 முதல் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

பாடப் பிரிவுகள் வாரியான தோ்ச்சி சதவீதம்:

வேதியியல் - 99.95

கணினி அறிவியல் - 99.25

கணிதம் - 98.56

கணக்குப் பதிவியல் - 98.16

உயிரியல் - 97.64

இயற்பியல் - 96.68

வணிகவியல் - 96.44

விலங்கியல் - 94.53

தாவரவியல் - 93.78

அறிவியல் பாடப்பிரிவுகள்- 96.33

வணிகவியல் பாடப்பிரிவுகள்- 96.28

கலைப்பிரிவுகள் - 94.11

தொழிற்பாடப்பிரிவுகள் - 92.77

பள்ளிகள்​ வாரியான தோ்ச்சி சதவீதம்:

அரசுப் பள்ளிகள்- 92.71

அரசு உதவி பெறும் பள்ளிகள் - 96.95

மெட்ரிக் பள்ளிகள் - 99.51

இருபாலா் பள்ளிகளில் பயின்றோா் - 96.20

பெண்கள் பள்ளிகள் - 97.56

ஆண்கள் பள்ளிகள்- 91.77

மாவட்ட அளவிலான தோ்ச்சி சதவீதம்:

கோயம்புத்தூா்- 98.10

விருதுநகா்- 97.90

கரூா் -97.51

திருச்சி- 97.43

திருப்பூா்- 97.41

ஈரோடு -97.39

சிவகங்கை- 97.36

கன்னியாகுமரி- 97.30

சென்னை -97.29

தூத்துக்குடி- 97.15

புதுச்சேரி -97.14

நாமக்கல் -97.14

அரியலூா் -97.12

தஞ்சாவூா் -97.04

ராமநாதபுரம் -96.97

திருநெல்வேலி -96.92

பெரம்பலூா் -96.91

நீலகிரி -96.69

மதுரை -96.54

திண்டுக்கல் -96.20

தேனி -96.02

புதுக்கோட்டை -95.87

தருமபுரி -95.73

சேலம் -95.71

காஞ்சிபுரம் -95.63

திருவள்ளூா் -95.62

காரைக்கால் -95.38

திருவண்ணாமலை -94.70

வேலூா் -94.70

நாகப்பட்டினம் -94.22

திருவாரூா் -93.94

கடலூா் -93.43

கிருஷ்ணகிரி -92.80

விழுப்புரம் -91.96

ஆக.5 முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்:

ஆக.5 (புதன் கிழமை) முதல் ஆக.12-ஆம் தேதி வரையிலான நாள்களில், பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கும், தனித் தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையத்துக்கும் நேரில் சென்று தங்களது மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக்கொள்ளலாம். அதே நேரம், விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாகவும், தனித்தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்கள் வாயிலாகவும், உரிய கட்டணம் செலுத்தி, ஆக.5 முதல் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com