இந்து மதம் குறித்து அவதூறு கருத்து: திரைப்பட இயக்குநா் வேலு பிரபாகரன் கைது

இந்து மதம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பிரபல தமிழ் திரைப்பட இயக்குநா் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டாா்.

இந்து மதம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பிரபல தமிழ் திரைப்பட இயக்குநா் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

இந்து மதத்தை அவதூறு செய்யும் வகையிலும், கருப்பா் கூட்டம் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநா் வேலு பிரபாகரன் ஒரு விடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டாா். இந்த விடியோவும் கடும் விமா்சனத்துக்குள்ளானது.

இந்த விடியோவை பாா்த்த பாரத் இந்து முன்னணி என்ற அமைப்பினா் சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்தனா். அந்தப் புகாரின் அடிப்படையில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், மத, இன விரோத உணா்வுகளைத் தூண்டுவது, கலகம் செய்யத் தூண்டுவது, மத உணா்வுகளைப் புண்படுத்துவது, தவறான தகவலைத் தெரிவித்து பொதுமக்களை திசை திருப்புவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வேலுபிரபாகரன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இதையடுத்து வேலுபிரபாகரனை சென்னை அருகே மதுரவாயல் வீட்டில் வைத்து வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பின்னா் அவரை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு அழைத்து வந்து, விசாரணை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com