அரசியல் இருப்பிற்காக எதிர்மறைக் கருத்துக்களைக் கூறுபவர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் காமராஜ்

அரசியலில் தனது இருப்பை காட்டிக் கொள்ள எதிர்மறை கருத்துகளை கூறுகிறார் ஸ்டாலின் என அமைச்சர் ஆர்.காமராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவ முகாமை பார்வையிடும் அமைச்சர் காமராஜ்
மருத்துவ முகாமை பார்வையிடும் அமைச்சர் காமராஜ்

அரசியலில் தனது இருப்பை காட்டிக் கொள்ள எதிர்மறை கருத்துகளை கூறுகிறார் ஸ்டாலின் என அமைச்சர் ஆர்.காமராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி சார்பில் சந்தைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கரோனா நோய் தடுப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு , மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமை வகித்தார்.மருத்துவ முகாமினை, தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர். காமராஜ்,  “கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகள் மற்றும் மாநிலங்களுக்கு முன் மாதிரியான செயல் திட்டங்களை தமிழக அரசு எடுத்து வந்ததன் காரணமாக முன்பைக் காட்டிலும் சென்னையில்   நோய் தொற்றின் வீரியம் பல மடங்கு குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக உள் மாவட்டங்களில் தொற்று இல்லை என்ற நிலை இருந்தது. பின்னர் ,சென்னை மற்றும் வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு வந்தவர்களால் கரோனா தொற்றின் தாக்கம் சிறிது அதிகரித்தாலும் . மருத்துக் குழுவின் தீவிர தொடர் நடவடிக்கையால் கரோனா பாதித்தவர்களும் சிகிச்சை அளிப்பது , தேவையான இடங்களில்  மருத்துவ முகாம் நடத்தி ஆரம்ப நிலையிலேயே தொற்று கட்டறியப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட மருத்துவப் பணிகளால் மற்ற மாவட்டங்களிலும் நோய் தொற்று கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.


திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 1665 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு இதில் அதிக பாதிகப் பதிப்பு உள்ளானவர்கள் 97 பேர் மட்டும் உள்ளனர். இவர்களுக்கு திருவாரூர் மருந்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். மற்றவர்கள் ஆரம்ப நிலை என கட்டறியப்பட்டு அவர்கள் சிறப்பு முகாமில் தங்க வைத்து முழு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து விட்டதால் இன்னும் ஒரு சில நாள்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

நிகழாண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் 30 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதனை நெருக்கும் இடத்திற்கு வந்து விட்டோம் .இது நாள் வரை 4 லட்சத்து 63 ஆயிரம் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் பயன் பெற்றுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில்  திடீர் மழையால்  ஒரு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்ய  கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டிருந்த 75 ஆயிரம் நெல் மூட்டைகள் பாதுகாப்பு வசதியின்றி சேதமடைந்து விட்டதாக வரும் தகவல் உண்மை இல்லை. வதந்தியை பரப்பி குறைந்த விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை வாங்குவதற்காக லாப நோக்குடன் இடைத்தரகர்கள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை அடுக்க தேவையான இடமும் நெல்லை உலர்த்த களமும் உள்ளது.” என்றார்.


மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை திட்டம் குறித்த கேள்விக்கு , “ஆளும் அதிமுக தனது மெளனத்தை கலைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் எப்போதும் அரசியலில் தனது  இருப்பை காட்டிக் கொள்வதற்காக எதிர்மறை அரசியல் செய்பவர்.
32 ஆண்டுக்கு பின் புதிய கல்விக் கொள்ளை அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தெளிவான ஆய்வு , கருத்துகள் கேட்டறிந்த பின்புதான் தமிழக அரசு தனது முடிவினை அறிவிக்கும்.” என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரப் பணி துணை இயக்குநர் விஜயகுமார் , மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் எஸ். புண்ணியக் கோட்டி , நகராட்சி ஆணையர் கமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com