காவிரிக்கரைப் பகுதியில் ஆடிப்பெருக்கு விழா; முழு பொதுமுடக்கத்தால் பக்தர்கள் வருகை குறைந்தது!

ஆடிப்பெருக்கு விழாவினை ஒட்டி, காவிரிக்கரைப் பகுதிகளில், ஞாயிறு அன்று, குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
காவிரிக்கரைப் படித்துறைப் பகுதியில் ஞாயிறு அன்று  பக்தர்கள் புனித நீராடியக்காட்சி
காவிரிக்கரைப் படித்துறைப் பகுதியில் ஞாயிறு அன்று  பக்தர்கள் புனித நீராடியக்காட்சி

ஆடிப்பெருக்கு விழாவினை ஒட்டி, காவிரிக்கரைப் பகுதிகளில், ஞாயிறு அன்று, குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். ஆண்டுதோறும் ஆடிப்பெருக்குத் தினத்தில், சேலம் மாவட்டம்,  எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், கோட்டைமேடு படித்துறை, கோனேரிப்பட்டி பரிசல்துறை உள்ளிட்ட பகுதியில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள், காவிரியில் புனித நீராடி, சுமங்கலி பூஜை, குலதெய்வ வழிபாடு, உற்சவர் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்தவதுடன், சுமங்கலிப் பெண்கள், ஆற்றங்கரையில் பூஜை செய்து, புதிய தாலிக்கயிறு அணிந்து செல்வர்.

அதே போல் குடங்களில் காவிரி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட புனித நீரை கரையில் வைத்து வழிபாடு செய்து, தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரிக்கரைப் பகுதியில் புனித நீராடவும், பூஜைகள் செய்திடவும், குழுக்களாக வாகனங்களில் வந்து வழிபாடு செய்திடவும், மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

இதனை அடுத்து எடப்பாடி அடுத்த கள்ளுக்கடை நான்கு ரோடு, கல்வடங்கம் சாலை, கோனேரிப்பட்டி பிரதானசாலை, மேட்டூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தி போலீஸார் கண்காணித்து வருகின்றனர். காவல்துறையினரின் கண்காணிப்பு இல்லாத கிராமப்புற சிறு சாலைகள் வழியாக, இருசக்கர வாகனத்தில் காவிரிக்கரையை அடைந்த சிலர், இன்று காலை காவிரியில் இறங்கி புனித நீராடினர். மேலும் சிலர், வீட்டில் வைத்து பூஜை செய்வதற்காக சிறிய குடங்களில் காவிரி நீரை எடுத்துச் சென்றனர்.

முழு பொதுமுடக்கம், நோய்த்தொற்று குறித்த அச்சம், மற்றும் காவல்துறையினரின் தொடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிகழ் ஆண்டில், பூலாம்பட்டி பகுதி காவிரிக்கரைப்பகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களே புனித நீராடினர்.  அப்பகுதியில் புனித நீராட வந்தவர்களை போலீஸார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.                     

பட விளக்கம் : ஆடிப்பெருக்கினை ஒட்டி, காவல்த்துறையின் எச்சரிக்கையினை மீறி  பூலாம்பட்டி  அடுத்த, குப்பனூர்  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com