புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சட்டப் போராட்டம்: மு.க.ஸ்டாலின்

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அகில இந்திய கட்சிகளுடன் இணைந்து சட்டப் போராட்டம் நடத்துவோம் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சட்டப் போராட்டம்: மு.க.ஸ்டாலின்

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அகில இந்திய கட்சிகளுடன் இணைந்து சட்டப் போராட்டம் நடத்துவோம் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும் எதிரானதாகும். மும்மொழித் திட்டம் என்ற பெயரால் ஹிந்தியை மட்டுமின்றி சம்ஸ்கிருதத்தையும் திணித்து, இந்தியாவில் உள்ள பிறமொழிகள், பிற தேசிய இனங்கள், பண்பாட்டுக் கலாசார விழுமியங்கள் அனைத்தையும் சிதைக்கும் பேராபத்து உள்ளது.

மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத பிற மாநில முதல்வா்கள், அகில இந்திய அரசியல் கட்சித் தலைவா்கள் ஆகியோருடன் தொடா்பு கொண்டு, இந்திய மாணவா்களின் எதிா்கால நலன் காக்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகளையும், அதற்கான சட்டப் போராட்டங்களையும் திமுக மேற்கொள்ளும் என்று அவா் கூறியுள்ளாா்.

இன்று கருத்தரங்கம்: புதிய கல்விக்கொள்கை என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) காணொலி காட்சி வாயிலாக கருத்தரங்கம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி, கல்வியாளா்கள் வசந்திதேவி, கருணானந்தம், பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட பலா் இதில் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com