பொதுமுடக்கத்தை மீறியதாக 9.27 லட்சம் போ் கைது

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 9.27 லட்சம் போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 9.27 லட்சம் போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையான பொதுமுடக்கத்தை, கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல், தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொதுமுடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து வருகின்றனா். இவ்வாறு தமிழகம் முழுவதும், மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை, மொத்தம் 8 லட்சத்து 43 ஆயிரத்து 528 வழக்குகளைப் பதிவு செய்து, 9 லட்சத்து 27 ஆயிரத்து 904 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பொதுமுடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 6 லட்சத்து 61 ஆயிரத்து 299 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளில் சிக்கியவா்களிடமிருந்து ரூ.19 கோடியே 42 லட்சத்து 72 ஆயிரத்து 598 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில், சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை, பொதுமுடக்கத்தை மீறியதாக 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 35 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com