ஸ்ரீவில்லிபுத்தூரில் செம்மலர், ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தொழிலாளர் பெண்கள் நல ஆய்வறிக்கை வெளியீடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் செம்மலர் அமைப்பும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து தொழிலாளர் பெண்கள் நல ஆய்வறிக்கையை வெளியிட்டன
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் செம்மலர் அமைப்பும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து தொழிலாளர் பெண்கள் நல ஆய்வறிக்கையை வெளியிட்டன

தமிழ்நாடு தொழிலாளர் உரிமைக்கான கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக்கூடிய விருதுநகர் மாவட்ட செம்மலர் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் தென்மாவட்டங்களில் இன்றைய தொழிலாளர்களின் நிலை குறித்து கடந்த இரண்டு மாதங்களாக ஆய்வு நடத்தப்பட்டது.

மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் 706 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் கரோனா தொற்றால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் மாதம் ரூபாய் 9000  வழங்க வேண்டும். நலவாரியத்தில் உறுப்பினர் பதிவு எளிமையாக படவேண்டும். நல வாரியங்கள் குறித்த புதுப்புது தகவல்களை அவ்வப்பொழுது உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தென் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளால் குடும்ப வன்முறை பெருகுகிறது குடும்பமும் சீரழிக்கிறது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்து அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும்.

கரோனா காரணமாக பஞ்சாயத்து நிர்வாகங்கள் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் மக்களின் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. தற்போது உள்ள அரசு விதிகளைப் பின்பற்றி சமூக இடைவெளியோடு பஞ்சாயத்து நிர்வாகங்களை செயல்படுத்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரனா தொற்று பொது முடக்கத்தைக் காரணம் காட்டி தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தொழிலாளர்களின் உரிமைக்கான சட்டங்கள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு என்பது இயற்கை வளங்களை அழிக்கும்  போக்கைக் கொண்டிருப்பதால் அந்த வரைவை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய ஆய்வறிக்கையின் வெளியீட்டு விழா திங்கட்கிழமையன்று நடைபெற்றது.

 விழாவிற்கு செம்மலர் சங்கத்தின் தலைவி பிரியா தலைமை தாங்கினார் ஆய்வறிக்கையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுகந்தி வெளியிட செம்மலர் சங்கத்தின் பொருளாளர் முனீஸ்வரி பெற்றுக்கொண்டார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் வாழ்த்திப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com