புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன்

புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கையை பின்பற்றுவோம் என்ற முதல்வர் அறிவிப்பை வரவேற்கிறோம்.

ஏற்கெனவே மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் முதல்வருக்கு கொடுக்கப்பட்ட மனுவில், தேசிய கல்விக்கொள்கையில். உள்ள மும்மொழித் கொள்கையை நிராகரிக்க வேண்டும் என்றும், இருமொழிக் கல்விக்கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்றும், தேசிய கல்வி கொள்கையில் பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டிஒட்டுமொத்தமாக இந்த கல்விக்கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று கோரினோம்.  

புதிய கல்விக் கொள்கையில் பள்ளி கல்வியில் மாற்றம் கொண்டு வந்து குலக்கல்வி முறையை கொண்டு வரும் வழிவகை உள்ளது. புதிய கல்விக் கொள்கையின்படி கல்வி தொடர்பான எல்லா முடிவுகளையும் மத்திய அரசே தீர்மானிக்கும்படி உள்ளது. மாநில அரகளின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி திட்டம் என்பது ஏற்கதக்கதல்ல. பன்முகத்தன்மை சீரழிந்து மாநில உரிமை பறிக்கப்படும்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால் பள்ளிகளை மூடும் நிலை ஏற்படும்படி உள்ளது. தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு பற்றி கல்விக் கொள்கையில் குறிப்பிடப்படவில்லை. இடஒதுக்கீடு நிராகரிப்பது போன்று உள்ளது. எனவே ஓட்டு மொத்தமாக கல்விக்கொள்கையை நிராகரிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.” என்றார்.

மேலும், “தமிழகத்தில் இ-பாஸ் நடை முறையை ரத்து செய்ய வேண்டும். இ.பாஸ் வழங்க  ரூ 5 ஆயிரம் லஞ்சம் பெறப்படுகிறது. பொதுமக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர். அனைத்து மாநிலங்களும் ஊரடங்கை தளர்த்தும் நேரத்தில் தமிழகத்தில் மட்டும் கட்டுப்பாடுகள் அதிகரிப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால், சனிக்கிழமைகளில் மக்கள் அதிகம் கூடுவதால் நோய் தொற்றும் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. சனிக்கிழமை அன்று மதுபானக்கடைகள், மீன்மார்க்கெட். காய்கறி கடைகளில் சமூக இடைவெளியின்றி கூட்டம் அதிகரித்து தொற்று நோய் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த மாதம் ஆக.20 தேதிக்குள் ஒன்று மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் ஊரடங்கை நீக்குங்கள் என வலியுறுத்தி பெரிய போராட்டத்தில் ஈடுபட நாங்கள் யோசித்துள்ளோம்.” என்றார். 

கே.பாலகிருஷ்ணன் பேட்டியின் போது நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் முத்து ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com