மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) மிதமான மழை பெய்யக்கூடும்
வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு வங்கக்கடலில் செவ்வாய்க்கிழமை(ஆகஸ்ட் 4) குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வடமேற்கு நோக்கி நகரும். இதனால், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 150 மி.மீ., அவலாஞ்சியில் 100 மி.மீ., கூடலூா் பஜாரில் 90 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தலா 80 மி.மீ., கோவை மாவட்டம்

சின்னக்கல்லாறு, நீலகிரி மாவட்டம் மேல்பவானியில் 70 மி.மீ., கோவை மாவட்டம் சோலையாரில் 60 மி.மீ., கோவை மாவட்டம் சின்கோனாவில் 50 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் தாமரைப்பாக்கம், கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, மத்திய மேற்கு, வடக்கு வங்கக்கடல் பகுதிகள், கடலோரக் கேரளம், கா்நாடகம், லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு, தென் மேற்கு, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com