நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை கொட்டி வருவதால், மாவட்டத்தில் இன்று காலை வரை எட்டு பகுதிகளில் மழை சதமடித்துள்ளது. 
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை கொட்டி வருவதால், மாவட்டத்தில் இன்று காலை வரை எட்டு பகுதிகளில் மழை சதமடித்துள்ளது. 

மாவட்டத்தில் அதிகளவாக அப்பர் பவானியில் 308 மி மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் அவலாஞ்சியில்220 மி மீ, கூடலூரில் 202 மி மீரும் அப்பர் கூடலூரில் 192 மி மீ., எமரால்டில் 112 மி மீ., பந்தலூரில் 108 மி மீ.,  தேவாலாவில் 103 மி மீ., கிளன்மார்கனில் 100 மி.மீ., நடுவட்டத்தில் 95 மி மீ., மழை பதிவாகியுள்ளது. 

இவற்றை தவிர உதகையில் 31.2, கல்லட்டியில் 8, மசினகுடியில் 19, குந்தா 55, கெத்தை 5, பாலகொலா 36, குன்னூர் 1.5, கேத்தி 12, எடப்பள்ளி 2, உலிக்கல்1, கோத்தகிரி 3, கொடநாடு 15, கீழ் கோத்தகிரி 2, ஓவேலி 18,  செருமுள்ளி 30, பாடந்தொறை 65 மற்றும் சேரங்கோடு 69 மி மீ. மழை பதிவாகியுள்ளது. 

மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மின்சாரம் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழை அளவு சராசரியாக 63 மி மீ ஆகும். 

மேலும், கூடலூர் பகுதியில் பெய்துவரும் தொடர் கன மழையால் முதல் மைல் பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியிலுள்ள புறமணவயல் பழங்குடி காலனி வெள்ளத்தால் சூழப்பட்டது. 

அங்கு வசித்த 40 மேற்பட்ட குடும்பங்களை தீயணைப்புத் துறையினருடன் தன்னார்வலர்கள் இணைந்து அருகிலுள்ள அத்திப்பாளி அரசுப் பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.

கூடலூர் பகுதிகளில் நேற்று இரவு, சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. கூடலூர் சாலையில் பைக்காரா அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் அருகே  ஒரு ராட்சச கற்பூர மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.

இதனால், போக்குவரத்து தடை ஏற்பட்டது. உதகை தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தை அகற்றினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com