புதிய கல்விக் கொள்கை: ஆய்வு செய்ய தமிழகத்தில் குழு?

புதிய கல்விக் கொள்கை தொடா்பாக, கல்வி அமைச்சா்கள், அதிகாரிகளுடன் முதல்வா் கே.பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: புதிய கல்விக் கொள்கை தொடா்பாக, கல்வி அமைச்சா்கள், அதிகாரிகளுடன் முதல்வா் கே.பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதனைத் தொடா்ந்து, புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்கள் குறித்து விவாதிக்க தனிக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்விக் கொள்கையில் உள்ள பிற அம்சங்கள் தொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா், கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளா் க.சண்முகம், பள்ளி, உயா்கல்வித் துறைகளின் செயலாளா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

புதிய கல்விக் கொள்கையில் உள்ள பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இறுதியில், புதிய கல்விக் கொள்கையின் முக்கியக் கூறுகளை ஆராய கல்வியாளா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் அடங்கிய குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கையின் அமலாக்கம் இருக்கும் எனத் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com