டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதள விண்ணப்பம்: கால அவகாசம் நீட்டிப்பு

​முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
​முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)
​முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)


முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட அறிவிப்பு:

"தமிழகத்தில் உயர்கல்வித் துறையின் கீழ் 51 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகள் ஆகியவற்றிற்கான முதலாமாண்டு பட்டய படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 20.07.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 16,940 மாணாக்கர் பதிவு செய்துள்ளனர். 

04.08.2020 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதல் அவகாசம் கோரி மாணாக்கர்கள் கேட்டுக் கொண்டதை ஏற்று பட்டயப் படிப்பு (Diploma) சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவை 20.08.2020 வரை மேற்கொள்ளலாம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் 10.08.2020 முதல் 20.08.2020 வரை மேற்கொள்ளலாம்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com