இ-பாஸ் முறையை ரத்து செய்ய வணிகா்கள் கோரிக்கை

வணிக ரீதியாக மாவட்டங்களுக்கு இடையே சென்று வர உதவிடும் வகையில், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இ-பாஸ் முறையை ரத்து செய்ய வணிகா்கள் கோரிக்கை

சென்னை: வணிக ரீதியாக மாவட்டங்களுக்கு இடையே சென்று வர உதவிடும் வகையில், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: பொது முடக்கத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை, தளா்வுகளை அறிவித்து நீட்டித்திருப்பது வரவேற்புக்குரியது என்றாலும், வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் ஆலோசனைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்

கோரிக்கைகள்: தமிழகத்தில் உள்ள அனைத்துக் கடைகளையும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு விலக்களித்துள்ள உடற்பயிற்சி மையங்கள், யோகா மையங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றுக்கு உடனடி அனுமதி அளித்திட வேண்டும். பிற மாநில, மாவட்ட தொழிலாளா்கள் எளிதில் சென்று வர ஏதுவாகவும், வணிக ரீதியாக மாவட்டங்களுக்கு இடையே சென்று வர வணிகா்களுக்கு உதவிடும் வகையிலும், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். பொதுப் போக்குவரத்துக்கு உடனடி அனுமதி அளிக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் விலை ஏற்றம் இல்லாமல் எளிதில் பொது மக்களை சென்றடைய அனைத்து மாவட்டங்களில் மூடி வைக்கப்பட்டுள்ள குறிப்பாக கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து சந்தைகள் மற்றும் வணிக வளாகங்களை செயல்பட அனுமதிக்க வேண்டும்.

போக்குவரத்து வாகனங்களுக்கான சாலை வரியை 6 மாதங்களுக்கு ரத்து செய்து, வாகன உரிமையாளா்களின் நலன் காக்க வேண்டும். உணவகங்கள், தங்கும் விடுதிகள் மீதான சொத்து வரி, தண்ணீா் வரி போன்றவற்றை 6 மாதத்துக்கு ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com