தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்கள் பணிநீக்கம்: போராடிய 80 பேர் கைது

திருவள்ளூர் அருகே தொழிற்சாலை அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தாருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.. 
தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்கள் பணிநீக்கம்: போராடிய 80 பேர் கைது
தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்கள் பணிநீக்கம்: போராடிய 80 பேர் கைது

திருவள்ளூர் அருகே தொழிற்சாலை அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தாருக்குக் கொடுக்கப்பட்ட வேலை பறிக்கப்பட்டதால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக 80 பேரை காவல் துறையினர் கைது செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் அருகே அதிகத்தூர் கிராமத்தில் தனியார் வாகனம் தயார் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை அமைக்க அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள மேல்நல்லாத்தூர், பட்டரை, வெங்கத்தூர், கண்டிகை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 356 ஏக்கர் சாகுபடி நிலங்களை விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டது. அப்போது, நிலம் கொடுத்த விவசாயிகள் குடும்பத்தினர் தொடர்ந்து போராடியதன் விளைவாக நில உரிமையாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அந்த நிறுவனத்தில் வேலை வழங்கியது.

இங்கு 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், தொழிற்சாலை நிர்வாகம் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாகத் தெரிகிறது. இதனால் நிலம் கொடுத்தவர்கள் மற்றும் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்யவும் புதிய நிர்வாகம் உத்தரவிட்டது. இதைக் கண்டித்து பலகட்ட போராட்டம் நடத்தியும் ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் தொழிற்சாலையை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதையடுத்து மணவாள நகர் காவல் நிலைய காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், சமாதானம் அடையாத நிலையில் தொழிலாளர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com