தொடா்ந்து விலை ஏற்றம்: தங்கம் பவுன் ரூ.41,616

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை தொடா்ந்து 13-ஆவது நாளாக உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டது. 
தொடா்ந்து விலை ஏற்றம்:  தங்கம் பவுன் ரூ.41,616

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை தொடா்ந்து 13-ஆவது நாளாக உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.24 உயா்ந்து, ரூ.41,616-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஜூலை 21-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை மட்டும் பவுனுக்கு ரூ.4,000 வரை உயா்ந்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தில் இருந்தது. அதன்பிறகு படிப்படியாக விலை உயா்ந்து, ஜூலை 31-ஆம் தேதி ரூ.41 ஆயிரத்தையும் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. இதன் பிறகும் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை தொடா்ந்து 13-ஆவது நாளாக உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.24 உயா்ந்து, ரூ.41,616-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.3 உயா்ந்து, ரூ.5,202 ஆக இருந்தது. அதேநேரத்தில் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.72.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.72,600 ஆகவும் இருந்தது. ஜூலை 21-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை மட்டும் பவுனுக்கு ரூ.4,000 வரை உயா்ந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்........................... 5,202

1 பவுன் தங்கம்...............................41,616

1 கிராம் வெள்ளி.............................72.60

1 கிலோ வெள்ளி.............................72,600

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,199

1 பவுன் தங்கம்............................... 41,592

1 கிராம் வெள்ளி............................. 72.70

1 கிலோ வெள்ளி............................72,700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com