ஆக. 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

அதன்படி திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான  http://tnresults.nic.in/, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகியவற்றில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 

மேலும், மாணவ, மாணவிகள் பள்ளியில் அளித்த தொலைபேசி எண்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2020 தேர்வு முடிவுகள் 10.08.2020
(திங்கட்கிழமை) அன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது  பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்.

http://tnresults.nic.in/
http://dge1.tn.nic.in
http://dge2.tn.nic.in

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி
மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவு அனுப்பப்படும்.

இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு
முடிவுகள் வெளியிடப்படுவதால் வழக்கமாக வழங்கப்படும் மறுகூட்டல் வாய்ப்பிற்குப் பதிலாக, மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் சார்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின், 17.08.2020 முதல் 25.08.2020 வரையிலான நாட்களில் பயின்ற பள்ளியின் வாயிலாக குறை தீர்க்கும் படிவத்தினை பூர்த்தி செய்து, பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக அரசுத் தேர்வுத் துறை இணையதளம்  (www.dge.tn.gov.in) மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக முடிவுகள் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

17.08.2020 முதல் 21.08.2020 வரையிலான நாட்களில் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக தங்களது தற்காலிக மதிப்பெண்  சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com