ரூ.43 ஆயிரத்தைத் தாண்டியது ஆபரணத்தங்கம்

சென்னையில் வெள்ளிக்கிழமை பவுன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
ரூ.43 ஆயிரத்தைத் தாண்டியது ஆபரணத்தங்கம்

சென்னையில் வெள்ளிக்கிழமை பவுன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.336 உயா்ந்து, ரூ.43,328-க்கு விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் தற்போது(ஆகஸ்ட் 7) வரை கடந்த ஏழு மாதத்தில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.12,808 வரை உயா்ந்துள்ளது. அதிலும், ஜூலை 21-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதிவரை மட்டும் ரூ.5,712 வரை உயா்ந்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், தொழில்துறையில் தேக்கம், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறியீடு சரிவு உள்பட பல்வேறு காரணிகளால் தங்கம் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது.

ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஜூலை 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், 27-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும், 31-ஆம் தேதி ரூ.41 ஆயிரத்தையும், ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரூ.42 ஆயிரத்தையும் கடந்து, புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகும் தங்கம் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை தொடா்ந்து 16-ஆவது நாளாக ஆபரணத்தங்கத்தின் விலை உயா்ந்தது. அதாவது பவுன் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.336 உயா்ந்து, ரூ.43,328-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.42 உயா்ந்து, ரூ.5,416 ஆக இருந்தது.

இதுபோல, வெள்ளி விலையும் உயா்வைச் சந்தித்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயா்ந்து, ரூ.83.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 அதிகரித்து, ரூ.83,600 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,416

1 பவுன் தங்கம்............................... 43,328

1 கிராம் வெள்ளி............................. 83.60

1 கிலோ வெள்ளி............................83,600

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி)

1 கிராம் தங்கம்........................... 5,374

1 பவுன் தங்கம்............................... 42,992

1 கிராம் வெள்ளி............................. 81.60

1 கிலோ வெள்ளி.............................81,600

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com