கொடைக்கானலில் தெரு விளக்குகள் எரியாத நிலை: வன விலங்குகளால் பாதிப்படையும் பொது மக்கள்

கொடைக்கானலில் தெரு விளக்குகள் எரியாததால் வன விலங்குகளால் பொது மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
கொடைக்கானல் பிரகாபுரம் செல்லும் சாலையான தைக்கால் பகுதியில் தெரு'விளக்குகள் எரியாத நிலையில் இருளில் மூழ்கியுள்ளது
கொடைக்கானல் பிரகாபுரம் செல்லும் சாலையான தைக்கால் பகுதியில் தெரு'விளக்குகள் எரியாத நிலையில் இருளில் மூழ்கியுள்ளது

கொடைக்கானலில் தெரு விளக்குகள் எரியாததால் வன விலங்குகளால் பொது மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். 

கொடைக்கானல் நகராட்சி பகுதிகளான சீனிவாசபுரம், அப்சர்வேட்டரி, கல்குழி, செண்பகனுர், இருதயபுரம், சத்யாநகர், நாயுடுபுரம், தைக்கால், கார்மேல்புரம், உகார்த்தே நகர், வட்டக்கானல் உள்ளிட்ட 24−வார்டிற்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாகத் தெரு விளக்குகள் எரிவதில்லை. மாலை மற்றும் இரவு நேரங்களில் வன விலங்குகளான காட்டெருமை, காட்டுப் பன்றி ஆகியவைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

பொது மக்கள் அன்றாடப் பணிகளான விவசாயப் பணி மற்றும் தினக் கூலி பணிகளுக்குச் சென்று விட்டு மீண்டும் தங்களது வீடுகளுக்குச் செல்லும் போது இருளில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதோடு உயிர் பயத்துடன் செல்கின்றனர். கொடைக்கானல் நகர்ப் பகுதிகளிலேயே காட்டெருமை தாக்கி கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு இளைஞர் ஒருவர் இறந்துள்ளார் மற்றும் கர்ப்பிணிப் பெண் ஒருவரும் இறந்துள்ளனர். 

கொடைக்கானல் நகராட்சியில் கடந்த சில வருடங்களாக தெரு விளக்குகள் பராமரிப்பு செய்வதைத் தனியாரிடம் கொடுத்துள்ளனர். 24−வார்டு பகுதிக்கும் 2−பேர் மட்டுமே பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சரிவரப் பராமரிப்பு செய்வதில்லை. மேலும் எலக்ட்ராணிக் உதிரிப்பாகங்கள் இல்லாததால் பழுது நீக்கம் செய்யப்பட முடியவில்லை. பல்வேறு காரணங்களால் நகராட்சி பகுதிகளில் தெரு விளக்குகள் எரியாமல் இருந்து"வருகின்றன.

சில நேரங்களில் கொடைக்கானல் பகுதிகளில் அதிக அளவு மேகமூட்டம் இருந்து வரும் அப்போது சாலைகளில் காட்டெருமை, பன்றி ஆகியவை இருப்பது கூட தெரியாமல் பொது மக்கள் செல்லும் போது, அவைகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பு மற்றும் பலத்த காயங்கள் ஏற்பட்டு வருகின்றது.

இதனால் கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில் உள்ள பொது மக்கள் இரவு, நேரங்களில் செல்லும் போது தினமும் இருளிலும், வன விலங்குகளுடனும் அச்சமுடன் பயணித்து வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com