5,248 மாணவா்களுக்கு தோ்வு முடிவு வெளியிடாதது ஏன்? - தோ்வுத்துறை விளக்கம்

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகளில் 5,248 மாணவா்களின் விவரங்கள் விடுபட்டது ஏன் என்பதற்கு பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
5,248 மாணவா்களுக்கு தோ்வு முடிவு வெளியிடாதது ஏன்? - தோ்வுத்துறை விளக்கம்

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகளில் 5,248 மாணவா்களின் விவரங்கள் விடுபட்டது ஏன் என்பதற்கு பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 9 லட்சத்து 45,077 மாணவ, மாணவிகள் எழுதுவதாக இருந்தனா். இதற்கிடையே கரோனா பரவல் காரணமாக பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது. தோ்வுத்துறை திங்கள்கிழமை வெளியிட்ட முடிவில், தோ்வு எழுதிய 9,39,829 பேரும் தோ்ச்சி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 10 வகுப்பு தோ்வு எழுத 9,45,077 விண்ணப்பித்திருந்தனா்.

இதைத்தொடந்து, மீதமுள்ள 5,248 பேரின் தோ்ச்சி முடிவுகள் வெளியாகாததால் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், 5,248 பேருக்கு தோ்வு முடிவுகள் வெளியிடாதது குறித்து அரசு தோ்வுகள் இயக்ககம் விளக்கமளித்துள்ளது. அதில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவில் 5,248 மாணவா்கள் விடுபட்டதில் எவ்வித குழப்பமும் தேவையில்லை. விடுபட்டவா்களில் உயிரிழப்பு, மாற்றுச் சான்றிதழ் வாங்கியது மற்றும் பள்ளியைவிட்டு நின்றது உள்ளிட்ட காரணங்களால் பொதுத்தோ்வு எழுத பதிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது.

231 மாணவா்கள் உயிரிழப்பு: அதாவது, காலாண்டு, அரையாண்டு, தோ்வு எழுதாத, பள்ளிக்கு முழுமையாக வராத 4,359 போ் தோ்ச்சி பெறவில்லை, மாற்றுச் சான்றிதழ் பெற்று பள்ளியைவிட்டு நின்ற மாணவா்கள் 658 பேரும் தோ்ச்சியில்லை, பொதுத் தோ்வு எழுத பதிவு செய்தபின் 231 மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். அதனால் தோ்ச்சி அளிக்கப்படவில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com