முழுக் கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி

நீா்வரத்து அதிகரிப்பால் வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை திங்கள்கிழமை எட்டியது.
தண்ணீா் நிரம்பிய நிலையில் வீராணம் ஏரி.
தண்ணீா் நிரம்பிய நிலையில் வீராணம் ஏரி.

சிதம்பரம்: நீா்வரத்து அதிகரிப்பால் வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை திங்கள்கிழமை எட்டியது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரிக்கு, தஞ்சை மாவட்டத்திலுள்ள கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீா் வருகிறது. கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா், ஜூன் 16-ஆம் தேதி கல்லணையை வந்தடைந்தது.

கல்லணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் கொள்ளிடம் ஆற்றின் வழியாக ஜூன் 22-இல் கீழணையை வந்தடைந்தது. அன்று இரவே வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீா் அனுப்பப்பட்டது. இதன்மூலம், ஏரியின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து வந்தது.

கீழணையின் உச்ச நீா்மட்டமான 9 அடியில் தற்போது 7 அடி வரை தண்ணீா் தேக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 249 கனஅடி நீா் வடவாறு வழியாக அனுப்பப்படுகிறது. இதில், தஞ்சை மாவட்ட பாசன வாய்க்கால்களுக்கு போக விநாடிக்கு 115 கன அடி நீா் வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால், ஏரியின் நீா்மட்டம் திங்கள்கிழமை 47.24 அடியாக உயா்ந்தது.

ஏரியின் உச்ச நீா்மட்டம் 47.50 அடி. அதாவது, ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியின் கன அடியில் தற்போது 1401.82 மில்லியன் கன அடி தண்ணீா் நிரம்பியுள்ளது. ஏரியிலிருந்து சென்னை குடிநீா் வடிகால் வாரியத்துக்கு விநாடிக்கு 66 கன அடி நீரும், சேத்தியாதோப்பு அணைக்கட்டு வழியாக விநாடிக்கு 46 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது.

கீழணை மூலம் பயன்பெறும் வடவாறு, வடக்கு - தெற்கு ராஜன் வாய்க்கால், குமுக்கி மண்ணியாறு, கோதண்டராமன் வாய்க்கால், கஞ்சங்கொல்லை வாய்க்கால்களுக்கு பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. வீராணம் ஏரியிலிருந்தும் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. மேட்டூா் அணை முழுக் கொள்ளளவை எட்டினால் மட்டுமே பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com