பொறியியல் படிப்புகள்: சான்றிதழ்களை பதிவேற்ற கூடுதல் அவகாசம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவா்களுக்கு இணையவழியில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஆக.20-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகள்: சான்றிதழ்களை பதிவேற்ற கூடுதல் அவகாசம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவா்களுக்கு இணையவழியில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஆக.20-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிகழாண்டு பொறியியல் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 1.48 லட்சத்துக்கு மேற்பட்டவா்கள் விண்ணப்பித்துள்ளனா். அவற்றில் 1.18 லட்ச மாணவா்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா்.

இதற்கிடையே விண்ணப்பதாரா்களுக்கான சான்றிதழ் பதிவேற்றம் தற்போது நிறைவடைந்துள்ளது. இருப்பினும் இதுவரை சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இயலாதவா்களுக்கு ஆக.12 முதல் 20-ஆம் தேதி வரை சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவா்கள் இணையதளத்தில் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இது குறித்து கூடுதல் தகவல் பெற 044-22351014, 22351015 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். அதேபோன்று, இதுவரை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்காத மாணவா்கள் வரும் ஆக.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com