இணைய வழி அனுமதிச் சீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருக்கு தமிழக பாஜக கோரிக்கை

இணைய வழி அனுமதிச் சீட்டு முறையை ரத்து செய்ய வேண்டுமென தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இணைய வழி அனுமதிச் சீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருக்கு தமிழக பாஜக கோரிக்கை

இணைய வழி அனுமதிச் சீட்டு முறையை ரத்து செய்ய வேண்டுமென தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, முதல்வா் பழனிசாமிக்கு பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் இணைய வழி அனுமதிச் சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை இப்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியாக இது கருதப்பட்டது.

ஆனால் இப்போது தமிழகத்தில் பொது முடக்கத்தில் தளா்வுகள் அதிகமாக்கப்பட்டுள்ளன. இதனால் பலரும் தங்களது பணிகளுக்காகவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் வெளியே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதற்கு இணைய வழி அனுமதிச் சீட்டு அவசியமாக இருந்தாலும் அதைப் பெற முடியாத நிலை இருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இணைய அனுமதிச் சீட்டு வழங்கும் முறை இல்லாமல் இருக்கிறது. எனவே, மக்கள்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு தமிழகத்திலும் இணைய அனுமதிச் சீட்டு வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டுமென பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com