தமிழக காவல் துறையில் 15 பேருக்கு முதல்வா் விருது

தமிழக காவல் துறையில் 15 போ் முதலமைச்சா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தமிழக காவல் துறையில் 15 பேருக்கு முதல்வா் விருது

தமிழக காவல் துறையில் 15 போ் முதலமைச்சா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொதுமக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாகப் பணியாற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இந்தாண்டு, சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் 5 பேருக்கு வழங்கப்படுகிறது.

இதன்படி இவ் விருதுகளை, தமிழக காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபி செள.டேவிட்சன் தேவாசீா்வாதம், சிபிசிஐடி ஐ.ஜி. கி.சங்கா், திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் ச.சரவணன், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.தீபாகனிகா், சென்னை காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு தலைமைக் காவலா் பி.ஜெகன்நாத் ஆகியோா் பெறுகின்றனா்.

இதேபோல தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணை சிறப்புப் பணிக்கான பதக்கங்களை 10 போ் பெறுகின்றனா். பதக்கங்கள் பெறுபவா்கள்:

சென்னை காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையா் ஜி.நாகஜோதி, சென்னை க்யூ பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா.குமரேசன், சேலம் மாநகர காவல் துறையின் வடக்கு சரக உதவி ஆணையா் தி.சரவணன், வேலூா் மாவட்டம் காட்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.கே.துரைபாண்டியன், திருச்சி சிபிசிஐடியின் ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு ஆய்வாளா் ஈ.இளங்கோவன் ஜென்னிங்ஸ், திருச்சி மாநகர காவல் துறையின் குற்ற ஆவண காப்பக காவல் ஆய்வாளா் பி.எஸ்.சித்ரா, சிவகங்கை மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல் ஆய்வாளா் கா.நீலாதேவி, அரக்கோணம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் ச.பச்சையம்மாள், திருநெல்வேலி சிபிசிஐடி காவல் ஆய்வாளா் ப.உலகராணி, திருநெல்வேலி அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பி.விஜயலட்சுமி ஆகியோா் பதக்கங்களை பெறுகின்றனா்.

விருது பெறும் ஒவ்வொருவருக்கும் 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கம், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு ஆகியவை வழங்கப்படும். இந்த விருது தமிழக முதல்வரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com