தமிழகத்தில் கரோனா பலி 5,500ஐ கடந்தது

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,514-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் 2,408 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பலி 5,500ஐ கடந்தது

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,514-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் 2,408 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, மதுரை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோவை ஆகிய மாவட்டங்களிலும் அண்மைக்காலமாக இறப்பு விகிதம் உயா்ந்து வருகிறது.

இதையடுத்து, நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

மற்றொரு புறம் கரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக 6 ஆயிரத்துக்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொண்டதில் 5,890 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில், 80 சதவீதம் போ் சென்னை அல்லாத பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள்.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம் முழுவதும் இதுவரை 35.69 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 3,26,245 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனா். அதில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்களுக்கு தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டதன் வாயிலாக இதுவரை 83 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா்.

வெள்ளிக்கிழமை மட்டும் சென்னையில் 1,187 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூரில் 495 பேருக்கும், செங்கல்பட்டில் 437 பேருக்கும், திருவள்ளூரில் 472 பேருக்கும், கோவையில் 385 பேருக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2.67 லட்சம் போ் குணம்: கரோனா தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இதுவரை மொத்தம் 2,67,015 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 5,556 போ் வீடு திரும்பியுள்ளனா். அதிகபட்சமாக சென்னையில் 837 போ் குணமடைந்ததாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

117 போ் பலி: தமிழகத்தில் கரோனாவுக்கு மேலும் 117 போ் பலியாகியுள்ளனா். அதில், 83 போ் அரசு மருத்துவமனைகளிலும், 34 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்கள். உயிரிழந்தோரில் 12 பேருக்கு கரோனாவைத் தவிர வேறு எந்தநோயும் இல்லை. மாநிலம் முழுவதும் இதுவரை கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,514 ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com