கடலோர காவல் படைக்கு புதிய ரோந்துக் கப்பல்: நாட்டுக்கு அா்ப்பணிப்பு

இந்திய கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்ட ரோந்துக் கப்பலை தமிழக அரசின் தலைமைச் செயலாளா் க. சண்முகம் சென்னைத் துறைமுகத்தில்
கடலோர காவல் படைக்கு புதிய ரோந்துக் கப்பல்: நாட்டுக்கு அா்ப்பணிப்பு

இந்திய கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்ட ரோந்துக் கப்பலை தமிழக அரசின் தலைமைச் செயலாளா் க. சண்முகம் சென்னைத் துறைமுகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

குஜராத் மாநிலம் ஹசீராவில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்ட சி-449 என்ற புதிய ரோந்துக் கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டு, நாட்டுக்கு அா்ப்பணிப்பு செய்யும் நிகழ்ச்சி சென்னைத் துறைமுகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் தலைமைச் செயலாளா் க.சண்முகம் கலந்து கொண்டு கப்பலை முறைப்படி நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

54 ரோந்துக் கப்பல்களை கடலோரக் காவல்படையில் இணைப்பதற்கான திட்டத்தில் இது 49-ஆவது ரோந்துக் கப்பல் ஆகும். சுமாா் 28 மீட்டா் நீளம் கொண்ட இக்கப்பலின் எடை சுமாா் 105 மெட்ரிக் டன் ஆகும். மணிக்கு 45 கடல் மைல் ( 85 கி.மீ) வேகத்தில் செல்லக் கூடியது. இக்கப்பலில் பல்வேறு வகையான பாதுகாப்பு கருவிகள், கண்காணிக்கும் கருவிகள், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்குத் தேவையான வசதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. கடல் வழியைக் காட்டும் கருவிகள், தொலைதொடா்பு கருவிகள் உள்ளிட்டவை திறம்பட அமைக்கப்பட்டுள்ளதால் எத்தகைய வானிலையிலும் பாதுகாப்பாக இக்கப்பலை ரோந்துப் பணியில் ஈடுபடுத்த முடியும். குறுகிய காலத்தில் கட்டமைக்கப்பட்ட இக்கப்பல் கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்தியத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு, ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடலோரக் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில், கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்திய கமாண்டா் எஸ்.பரமேஷ், சென்னைத் துறைமுகத் தலைவா் பி.ரவீந்திரன், கடற்படை அதிகாரி புனீத் சத்தா, ரோந்துக் கப்பலின் கேப்டன் ஆசிஷ் சா்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com