ஓடிபி மோசடி: இப்படியும் ஏமாற்றலாம்.. எச்சரிக்கை

இந்த நிலையில் ஓடிபி மோசடி குறித்து விருதுநகர் காவல்துறை தரப்பில் பொதுமக்களுக்கு ஒரு அறிவுறுத்தல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஓடிபி மோசடி: இப்படியும் ஏமாற்றலாம்.. எச்சரிக்கை
ஓடிபி மோசடி: இப்படியும் ஏமாற்றலாம்.. எச்சரிக்கை


மக்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பம் வளர வளர, மோசடிகளும் நாள்தோறும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஓடிபி மோசடி குறித்து விருதுநகர் காவல்துறை தரப்பில் பொதுமக்களுக்கு ஒரு அறிவுறுத்தல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, ஓடிபி மோசடி என்று இதனை குறிப்பிடும் காவல்துறை, ஏமாற்றுக்காரர்கள், தொலைபேசி வாயிலாக ஒருவரை தொடர்பு கொண்டு, மற்றவர் எண்ணுக்கு அனுப்ப வேண்டிய வெரிஃபிகேஷன் கோட் எண்ணை உங்களுக்கு தவறுதலாக அனுப்பிவிட்டேன். மறுபடியும் அந்த ஓடிபி எண்ணை எனக்கு திருப்பி அனுப்புங்கள் என்று கூறினால், நீங்கள் அதை திரும்ப அனுப்ப வேண்டாம்.

அவ்வாறு அனுப்பும்பட்சத்தில், செல்லிடப்பேசி எண் ஊடுருவப்பட்டு, வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடுப்போகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒடிபி எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கிக் கடன் அட்டையின் பண மதிப்பை உயர்த்துவதற்காக ஓடிபி எண்ணை சொல்லுங்கள், உங்கள் வங்கிக் கணக்கின் ஏடிஎம் அட்டையை மேம்படுத்த ஓடிபி எண் அனுப்பப்பட்டிருக்கிறது, அதை சொல்லுங்கள் என்றெல்லாம் ஓடிபி எண்களை மோசடியாளர்கள் பெற்று பணத்தை கொள்ளையடித்து வந்தனர். தற்போது புதிய முறையில் ஓடிபியை பெற மோசடிக் கும்பல் திட்டமிட்டுள்ளது. இது குறித்து விருதுநகர் காவல்துறையினர் பொதுமக்களுக்கு மேற்கண்ட எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com