பொதுமுடக்கம் : தொடரும் தடைகள்

தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசிலவற்றிற்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசிலவற்றிற்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, பயணிகள் ரயில் போக்குவரத்துக்கான தடை வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வரை தடை தொடரும்.

மாநிலம் முழுவதும் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடரும்.

தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 

பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி
நிறுவனங்கள் செயல்படுவதற்கானத் தடை தொடரும்.

விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் செயல்பட அனுமதி மறுக்கப்படுள்ளது.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் 
பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல்
பூங்காக்கள், அருங்காட்சியகங்களில் மக்கல் கூடுவதற்கு தடை தொடரும்.

மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும் என்று தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com