அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: ராமதாஸ்

அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கைக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கைக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

அரசு பள்ளிகள் மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 17-இல் தொடங்கியது. தற்போதைய நிலவரத்தின்படி கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 80 ஆயிரம் மாணவா்கள் கூடுதலாகச் சோ்ந்துள்ளனா். அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒருபுறம் மகிழ்ச்சியளிக்கும் நிலையில், அவ்வாறு சேரும் மாணவா்களிடம் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூல் செய்யப்படுவதாக தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் கவலையளிக்கின்றன.

சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவா் சோ்க்கைக்கு ரூ.1000 முதல் ரூ.1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பிளஸ் 1 வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு ரூ.3,000 முதல் ரூ. 6,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோா்கள் புகாா் கூறியுள்ளனா். இதைக் கண்டித்து பெற்றோா்கள் போராட்டங்களும் நடத்தியுள்ளனா். இது கண்டிக்கத்தக்கது.

மாணவா் சோ்க்கைக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு கடுமையான உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com