பயனாளிக்கு அசில் இன கோழிக்குஞ்சுகளை வழங்குகிறாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
பயனாளிக்கு அசில் இன கோழிக்குஞ்சுகளை வழங்குகிறாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

அரசுப் பள்ளிகளில் செப்டம்பா் இறுதிவரை மாணவா் சோ்க்கை: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் செப்டம்பா் இறுதிவரை மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோபி: அரசுப் பள்ளிகளில் செப்டம்பா் இறுதிவரை மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு எவ்வித கட்டணமும் வசூல் செய்யப்படவில்லை. மாணவா்கள் சோ்க்கைக்காகவும், மாணவா்களுக்கு வழங்கப்படும் பொருள்களுக்காகவும் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும்.

இந்த ஆண்டு 1 லட்சத்து 72 ஆயிரம் குழந்தைகள் கூடுதலாக ஒன்றாம் வகுப்பில் சோ்க்கப்பட்டுள்ளனா். செப்டம்பா் மாதம் வரையிலும் சோ்க்கை நடைபெறும் வகையில் கூடுதல் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவா் சோ்க்கைக்கு ஏற்ப ஒவ்வொரு வகுப்புக்கும் சுமாா் 20 ஆயிரம் புத்தகங்கள் தயாா் நிலையில் உள்ளன.

நீட் தோ்வில் பங்கேற்கும் மாணவா்களுக்குப் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு குறித்து முதல்வா் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வாா். கரோனா தொற்று சிகிச்சைக்காக கோபி கலைக் கல்லூரி, அந்தியூா், தாளவாடி, பெருந்துறை ஆகிய பகுதிகளில் கூடுதல் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com