பொதுமுடக்கம் : புதிதாக அறிவிக்கப்பட்ட தளர்வுகள்

தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருசிலவற்றிற்கு தமிழக அரசு தளர்வுகளை அளித்துள்ளது.
அரசுப் பேருந்து சேவை செப்டம்பர் 1 முதல் வழிகாட்டு நடைமுறைகளுடன் அனுமதிக்கப்படுகிறது
அரசுப் பேருந்து சேவை செப்டம்பர் 1 முதல் வழிகாட்டு நடைமுறைகளுடன் அனுமதிக்கப்படுகிறது

தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருசிலவற்றிற்கு தமிழக அரசு தளர்வுகளை அளித்துள்ளது.

மாவட்டத்திற்குள் அரசுப் பேருந்து சேவை செப்டப்மர் 1 முதல் வழிகாட்டு நடைமுறைகளுடன் அனுமதிக்கப்படுகிறது

சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7-ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி.

தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. 

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் இ-பாஸ் பெற்றுக்கொண்டு வருவதற்கு அனுமதி

பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி

தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களையும் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி. இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம்.

வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8.00 மணி
வரை இயங்க அனுமதி

உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி
வரை இயங்க அனுமதி. பார்சல் 9 மணிவரை அனுமதி

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க
அனுமதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com