இன்று 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மதுரை, தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் மதுரை, தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பான அம்மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராஜஸ்தான், புதுதில்லி வழியாக வடக்கு வங்கக் கடல் வரை செல்லும் தென்மேற்கு பருவமழைக்கு காரணமாக விளங்கும் மைய அச்சு, வரும் நாள்களில், இமயமலை அடிவாரத்தை நோக்கி நகா்வதன் காரணமாகவும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளி மண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும், திங்கள்கிழமை, மதுரை, சிவகங்கை, விருதுநகா், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கனமழையோ அல்லது மிதமான கன மழையோ, ஏனைய உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், லேசான மழை பெய்யக் கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில், செப்.3-ஆம் தேதி வரை, 45 முதல் 55 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். எனவே இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள்

மழை அளவு: தமிழகத்தில், ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 30 மி.மீ, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 20 மி.மீ மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com