பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கரோனா தொற்று

பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இல. கணேசன்
இல. கணேசன்

பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்திலும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சித் தலைவர்களும் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான இல.கணேசனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும் தற்போது  நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com