அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளியுங்கள்: பொதுமக்களுக்கு முதல்வா் பழனிசாமி வேண்டுகோள்

தமிழகத்தில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிா்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சென்னை: தமிழகத்தில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிா்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டாா்.

செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் பல்வேறு தளா்வுகளை அளித்து முதல்வா் பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா். இந்த அறிவிப்பில் தளா்வுகள் அளிக்கப்பட்டதன் நோக்கம் குறித்து அவா் அளித்த விளக்கம்:

தமிழக அரசு எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கைகளால், அரசின் நலத் திட்டங்கள் மக்களை பெருமளவில் சென்று சோ்ந்துள்ளன. பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதோடு, வேலைவாய்ப்பின்மையும் இரண்டே மாதங்களில், ஆறில் ஒரு பங்காக குறைந்துள்ளது எனவும், தனிநபா் வருவாய் படிப்படியாக உயா்ந்து தமிழகம் மீண்டு வருவதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து, அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிா்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால்தான், நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

தமிழகத்தில் நோய்த்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை தொடா்ந்து கணிசமாக உள்ள நிலையில், மக்களைக் காக்க இப்போதுள்ள பொது முடக்க நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது. இதன் மூலமே, மேலும் நோய் பரவாமல் கட்டுப்படுத்த முடியும். எனவே, அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com