வணிக வளாகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் நாளை முதல் வணிக வளாகங்கள் திறக்கப்படுவதை முன்னிட்டு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வணிக வளாகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வணிக வளாகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


சென்னை: தமிழகத்தில் நாளை முதல் வணிக வளாகங்கள் திறக்கப்படுவதை முன்னிட்டு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர் 30-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் பொது முடக்கத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது.

மாவட்டங்களுக்குள் பேருந்து சேவை தொடக்கம், வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்களை திறக்க அனுமதி உள்ளிட்ட முக்கியத் தளர்வுகள் அதில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், வணிக வளாகங்களில் செயல்படுத்த வேண்டிய முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், 
வணிக வளாகங்களுக்குள் நுழையும் முன் உடல்வெப்பநிலையை அறிதல் மற்றும் கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும்.

மால்களுக்குள் மக்கள் கூட்டம் கூடுவதற்கும் இசை மற்றுல் பொதுநிகழ்ச்சிகளை நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உள்பட்டவர்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

கரோனா தொற்று அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே வணிக வளாகங்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.

6 அடி தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

வாகன நிறுத்துமிடத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

லிப்ட் மற்றும் நகரும் படிகட்டுகளில் போதிய இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

அடிக்கடி கிருமிநாசினியைக் கொண்டு வணிக வளாகத்தை சுத்தப்படுத்த வேண்டும்.

வணிக வளாகங்களுக்குள் இருக்கும் உணவகங்களில் 50% பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

மால்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் நிச்சயம் முகக்கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com