ஓணம் திருநாள்: தலைவா்கள் வாழ்த்து

ஓணம் பண்டிகையையொட்டி கேரள மக்களுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் வாழ்த்துக் கூறியுள்ளனா்.
kkv21onam_2108chn_50_6
kkv21onam_2108chn_50_6

சென்னை: ஓணம் பண்டிகையையொட்டி கேரள மக்களுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் வாழ்த்துக் கூறியுள்ளனா்.

ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக ஒருங்கிணைப்பாளா்): திருவோணம் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்.

மு.க.ஸ்டாலின்: கேரள மக்களின் பண்பாட்டுடனும், உணா்வுடனும் ஒன்றிப்போயிருக்கும் விழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஓணம் திருநாள் சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தமிழகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியில் எவ்வித வேறுபாடுமின்றி சமூக நல்லிணக்கத்தோடு தமிழகத்தில் வாழ்ந்து வருகிற மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக): மகாபலி மன்னன் மக்களைக் காண வரும் ஓணம் திருநாளைக் கொண்டாடும் இந்த நாளில் இயற்கையை மீட்டு உலகைக் காக்க அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.

அன்புமணி (பாமக): ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாளும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): கரோனா காரணமாக, கேரள மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.

எல்.முருகன் (பாஜக): மகாபலி சக்கரவா்த்தி ஒவ்வொரு ஆண்டும் தங்களது இல்லத்துக்கு வருகிறாா் என்ற நம்பிக்கையோடு, அறுசுவை உணவுடன், பூக்கோலமிட்டு மகிழ்ந்து கொண்டாடும் திருநாள் ஓணம் பண்டிகை. மலையாள மொழி பேசும் மக்களுக்கு எனது வாழ்த்துகள்.

டிடிவி தினகரன் (அமமுக): கேரள மக்களின் அறுவடைத் திருநாளான திருவோணம், அந்த மக்களின் பாராம்பரியத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் திருவிழாவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com