மணப்பாறை அருகே பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம்

மணப்பாறை அருகே பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தரக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம்
பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம்

மணப்பாறை அருகே பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தரக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செக்கணம் கிராமம் கருங்குளத்தில் சர்வே எண்182/3-ல் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் பட்டியல் இன மக்களுக்கென ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பஞ்சமி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து பயன்பாட்டில் வைத்திருப்பதாகவும், அவற்றை பட்டியல் இன மக்களுக்கு தர மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த மக்கள் சார்பில் பஞ்சமி நிலத்தை மீட்டு தரக் கோரி அரசுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதில் தற்போது உள்ள குடியிருப்பு பாறைகள் சார்ந்த இடமாக இருப்பதால் புதிய கட்டிடங்கள் கட்டுவதிலும், கழிவறைகள் அமைப்பதிலும் சிரமம் இருப்பதாகவும், கழிவறைகள் இல்லாததால், அப்பகுதியில் வசித்து வரும் பெண்கள், வளரிளம் பெண்கள், இயற்கை உபாதைகளுக்கு 2 மைல் தூரம் நடந்து திறந்தவெளிக்கு பகுதியில் சென்று வருவதாகவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து கடந்த 6 மாதங்களாக அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் இல்லை என புகார் முன் வைக்கும் அப்பகுதி பட்டியல் இன மக்கள் இன்று அப்பகுதியில் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து, கைகளில் கோரிக்கை பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பஞ்சமி நிலத்தை மீட்டு தர கோரி கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் வருகின்ற வெள்ளிக்கிழமை இதுகுறித்து இருத்தரப்பு சமரச கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததையடுத்து அப்பகுதி மக்கள் போரட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com